தேவாரம் – தேர்ந்தெடுத்த பதிகங்கள் – பகுதி 2
Thevaram: selected hymns, part 2: Thirugnanasambandar, Thirumurai 2, hymn 85: the Kolaru Pathigam, Tamil text and meaning · திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
- வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
- மிகநல்ல வீணை தடவி
- மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
- உளமே புகுந்த அதனால்
- ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
- சனிபாம்பி ரண்டு முடனே
- ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
- அடியா ரவர்க்கு மிகவே.
- என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
- எருதேறி யேழை யுடனே
- பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
- உளமே புகுந்த அதனால்
- ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
- உடனாய நாள்க ளவைதாம்
- அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
- அடியா ரவர்க்கு மிகவே.
- உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
- உமையோடும் வெள்ளை விடைமேன்
- முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
- உளமே புகுந்த அதனால்
- திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
- திசை தெய்வ மானபலவும்
- அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
- அடியா ரவர்க்கு மிகவே.
- மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
- மறையோது மெங்கள் பரமன்
- நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
- உளமே புகுந்த அதனால்
- கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
- கொடுநோய்க ளான பலவும்
- அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
- அடியா ரவர்க்கு மிகவே.
- நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
- விடையேறும் நங்கள் பரமன்
- துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
- உளமே புகுந்த அதனால்
- வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
- மிகையான பூத மவையும்
- அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
- அடியா ரவர்க்கு மிகவே.
- வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
- மடவாள் தனோடு முடனாய்
- நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
- உளமே புகுந்த அதனால்
- கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
- கொடுநாக மோடு கரடி
- ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
- அடியா ரவர்க்கு மிகவே.
- செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
- விடையேறு செல்வ னடைவார்
- ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
- உளமே புகுந்த அதனால்
- வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
- வினையான வந்து நலியா
- அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
- அடியா ரவர்க்கு மிகவே.
- வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
- மடவாள் தனோடும் உடனாய்
- வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
- உளமே புகுந்த அதனால்
- ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
- இடரான வந்து நலியா
- ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
- அடியா ரவர்க்கு மிகவே.
- பலபல வேடமாகும் பரனாரி பாகன்
- பசுவேறும் எங்கள் பரமன்
- சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
- உளமே புகுந்த அதனால்
- மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
- வருகால மான பலவும்
- அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
- அடியா ரவர்க்கு மிகவே.
- கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
- குணமாய வேட விகிர்தன்
- மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
- உளமே புகுந்த அதனால்
- புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
- திருநீறு செம்மை திடமே
- அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
- அடியா ரவர்க்கு மிகவே.
- தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
- வளர்செம்பொன் எங்கும் நிகழ
- நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
- மறைஞான ஞான முனிவன்
- தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
- நலியாத வண்ணம் உரைசெய்
- ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
- அரசாள்வர் ஆணை நமதே.
What it means (பொருள்)
A short summary in Tamil and in plain English, in 2 parts that each cover a group of lines (the line numbers are shown), written for this page. Important: the meanings on this site were written with AI assistance and may contain errors. They are a study aid, not a translation by a scholar. Please check them with a teacher, a learned reader or a printed commentary before relying on them, and use the contact page to report a mistake.
இப்பக்கத்துக்காக எழுதப்பட்ட, தமிழிலும் எளிய ஆங்கிலத்திலும் அமைந்த சுருக்கமான பொருள்: 2 பகுதிகளாக, ஒவ்வொன்றும் சில வரிகளை உள்ளடக்கியது (வரி எண்கள் காட்டப்பட்டுள்ளன). முக்கியம்: இத்தளத்தில் உள்ள பொருள் விளக்கங்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் எழுதப்பட்டவை; அவற்றில் பிழைகள் இருக்கலாம். அவை கற்க உதவும் குறிப்புகள் மட்டுமே, அறிஞர் ஒருவரின் மொழிபெயர்ப்பு அல்ல. அவற்றை நம்புவதற்கு முன் ஆசிரியர், கற்றறிந்தவர் அல்லது அச்சிட்ட உரை நூலுடன் சரிபார்த்துக் கொள்ளுங்கள்; பிழை கண்டால் தொடர்புப் பக்கத்தின் வழியே தெரிவியுங்கள்.
தமிழில்
வரிகள் 1–80: இந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் சிவபெருமான் தன் உள்ளத்தில் புகுந்ததால் என்ற காரணத்தைக் கூறுகிறது. உமையொரு பாகன், விடம் உண்ட கண்டன், பிறையும் கங்கையும் சூடியவன், காளையில் ஏறி வருபவன் என்றெல்லாம் அவன் வருணிக்கப்படுகிறான். அதனால் கதிரவன், திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இரண்டு பாம்புக் கோள்கள் ஆகியவை அடியார்க்கு நன்மையே செய்யும் என்று முடிகின்றன. இரண்டாம் பாடலில் மூன்றாம் அடியில் நாள்கள் பற்றிய குறிப்பு உள்ளது. வரிகள் 81–88: பதினோராம் பாடலில் சம்பந்தர் பிரமாபுரத்தில் தோன்றிய ஞான முனிவர் என்று தன்னைக் கூறி, கோள்களும் நாள்களும் அடியாரை வருத்தாதபடி இச்சொல்மாலையை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் என்று கூறுகிறார்.
In English
Lines 1–80: Each verse of this hymn gives a reason: the Lord has entered the poet's heart. He is described as the one who shares his body with Uma, whose throat holds the poison, who wears the crescent moon and the Ganga, and who comes riding the bull. Because of this, the sun, moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn and the two shadow planets all do good to his devotees. The second verse also mentions the days (stars) of the month. Lines 81–88: In verse 11 Sambandar names himself as the wise sage of Pirama puram. He says that devotees who recite this garland of words, composed so that planets and days do not trouble the devotees, will rule in the heavens.
About this textஇந்நூலைப் பற்றி
Part 2 of 6 of Thevaram: selected hymns: Thirugnanasambandar, Thirumurai 2, hymn 85: the Kolaru Pathigam. The text is taken from the open Project Madurai e-text; the meaning is our own short summary.
How to use this page: press Follow along and read the verse aloud as each word lights up. The highlight is only a guide to the pace and makes no sound, and you can tap any word to start from it. Then press Listen under the meaning to hear it in Tamil or in English. Use A+ to make the verse larger for reciting together, or print the page.
தேவாரம்: தேர்ந்தெடுத்த பதிகங்கள், மொத்தம் 6 பகுதிகளில் பகுதி 2: திருஞானசம்பந்தர், இரண்டாம் திருமுறை, பதிகம் 85: கோளறு பதிகம். இந்த நூல் உரை Project Madurai தளத்தின் திறந்த மின்னூலிலிருந்து எடுக்கப்பட்டது; பொருள் எங்கள் சொந்தச் சுருக்கம்.
இப்பக்கத்தைப் பயன்படுத்தும் முறை: உடன் படியுங்கள் என்பதை அழுத்தி, ஒவ்வொரு சொல்லும் ஒளிரும்போது பாடலை உரக்கப் படியுங்கள். ஒளிர்வு வேகத்துக்கான வழிகாட்டி மட்டுமே; அது ஒலி எழுப்பாது. எந்தச் சொல்லைத் தொட்டாலும் அங்கிருந்து தொடங்கலாம். பிறகு பொருளின் கீழ் உள்ள கேளுங்கள் என்பதை அழுத்தி, பொருளைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ கேட்கலாம். சேர்ந்து பாடும்போது பாடலைப் பெரிதாக்க A+ பொத்தானைப் பயன்படுத்துங்கள், அல்லது பக்கத்தை அச்சிடுங்கள்.
வாசிப்பு வழிகாட்டி சொற்களை நிலையான வேகத்தில் ஒளிரச் செய்கிறது; நீங்கள் ஒலியை இயக்கினால் மட்டுமே ஒலிக்கும். பொருளை உங்கள் சாதனத்தில் ஏற்கெனவே உள்ள கணினிக் குரல் வாசிக்கிறது; எனவே அது ஒலிக்கும் விதம் நிறுவப்பட்ட குரல்களைப் பொறுத்தது. பாடல்களின் சொல்லமைப்பு அச்சுப் பதிப்புகளுக்கு இடையே சற்று மாறுபடலாம். பிழை கண்டால் எங்களுக்குத் தெரிவியுங்கள்.
The reading guide highlights words at a steady pace and is silent unless you turn the sound on. The meaning is read by a computer voice already on your device, so how it sounds depends on the voices installed. The wording of verses can differ slightly between printed editions. If you spot a mistake, please tell us.