திருப்பாவை – பாசுரம் 21
Thiruppavai verse 21: Yettra Kalangal Edhirpongi, Tamil text and meaning · ஆண்டாள் (Andal)
- ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
- மாற்றாதே பால்சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள்
- ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
- ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
- தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
- மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
- ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
- போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
What it means (பொருள்)
A short summary in Tamil and in plain English, one part for each line of the verse, written for this page.
தமிழில்
வைக்கும் பாத்திரங்கள் எதிரே பொங்கி வழியும்படி, இடைவிடாமல் பால் சொரியும் வள்ளல் தன்மை கொண்ட பெரிய பசுக்களை நிறையப் படைத்தவனின் மகனே, விழித்துக்கொள். உறுதி உடையவனே, பெரியவனே, உலகில் ஒளியாகத் தோன்றி நிற்கும் சுடரே, எழுந்திரு. உன் எதிரிகள் தம் வலிமையை இழந்து, உன் வாசலில் வந்து நின்று உன் அடியில் பணிவது போல, நாங்களும் உன்னைப் புகழ்ந்து போற்றி வந்திருக்கிறோம்.
In English
The pots set out for them overflow and spill over, so generous are the great cows that pour out their milk without stopping. Son of the one who owns such wealth, wake up. Steadfast and great one, you who appeared in the world as a flame, get up. Your enemies lose their strength and come to your gate to fall at your feet. In the same way, we have come to your door to praise you.
About this verse
This verse speaks to Krishna as the son of a man rich in cattle, and compares the girls' humble arrival to that of defeated enemies who come to bow at his feet.
How to use this page: press Follow along and read the verse aloud as each word lights up. The highlight is only a guide to the pace and makes no sound, and you can tap any word to start from it. Then press Listen under the meaning to hear it in Tamil or in English. Use A+ to make the verse larger for reciting together, or print the page.
The reading guide is silent: it only highlights words at a steady pace. The meaning is read by a computer voice already on your device, so how it sounds depends on the voices installed. The wording of verses can differ slightly between printed editions. If you spot a mistake, please tell us.