திருப்பள்ளியெழுச்சி – பாடல் 8
Thirupalliyezhuchi verse 8: Mundhiya Mudhal Nadu, Tamil text and meaning · மாணிக்கவாசகர் (Manikkavacakar)
- முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
- மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
- பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
- பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
- செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
- திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
- அந்தணன் ஆவதுங் காட்டிவந் தாண்டாய்
- ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே
What it means (பொருள்)
A short summary in Tamil and in plain English, one part for each line of the verse, written for this page.
தமிழில்
நீ முதலாகவும் நடுவாகவும் முடிவாகவும் ஆனவன். மும்மூர்த்திகளுமே உன்னை அறியவில்லை; வேறு யார் அறிவார்? பந்து பிடிக்கும் விரல்களை உடைய உமையும் நீயும், உன் அடியவர்களின் பழைய குடிசைகள்தோறும் எழுந்தருளிய பரம்பொருளே, செந்தீ போன்ற உன் திருமேனியையும் காட்டி, திருப்பெருந்துறையில் உள்ள கோயிலையும் காட்டி, ஓர் அந்தணனாக வருவதையும் காட்டி வந்து எங்களை ஆண்டாய். அருமையான அமுதமே, துயில் எழுந்தருள்வாயாக.
In English
You are the beginning, the middle and the end. Even the three great gods do not know you. Who else could? You, together with the Lady, whose fingers hold the ball, come to the old huts of your devotees, O Supreme One. You showed your form, which glows like red fire. You showed the temple at Thiruperunthurai. You showed yourself as a Brahmin teacher, and came to take us as your own. Precious nectar, please rise from your bed.
About this verse
This verse recalls how, according to tradition, the Lord appeared to Manikkavacakar as a teacher under a tree at Thiruperunthurai, and took him as his own. It also says that he visits even the humblest homes of his devotees.
How to use this page: press Follow along and read the verse aloud as each word lights up. The highlight is only a guide to the pace and makes no sound, and you can tap any word to start from it. Then press Listen under the meaning to hear it in Tamil or in English. Use A+ to make the verse larger for reciting together, or print the page.
The reading guide is silent: it only highlights words at a steady pace. The meaning is read by a computer voice already on your device, so how it sounds depends on the voices installed. The wording of verses can differ slightly between printed editions. If you spot a mistake, please tell us.